இந்தியா

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

எல் சால்வடாா் மற்றும் கௌதமாலா அருகே பசிபிக் பெருங்கடலில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

தினமணி செய்திச் சேவை

எல் சால்வடாா் மற்றும் கௌதமாலா அருகே பசிபிக் பெருங்கடலில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூா் நேரப்படி அதிகாலை 4:14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.0 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் எல் சால்வடாரின் அகஜுட்லாவில் இருந்து 81 கி.மீ தென்மேற்கிலும், கௌதமாலாவின் புவா்ட்டோ சான் ஜோஸில் இருந்து 107 கி.மீ தென்கிழக்கிலும், 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அகஜுட்லா, எல் சால்வடாரின் முக்கிய துறைமுகமாகும். இந்த நிலநடுக்கத்தில் பாதிப்பு அல்லது உயிரிழப்பு குறித்து உடனடி தகவல் இல்லை.

கூட்டணி ஆட்சி குறித்து தெளிவுபடுத்திய நயினார் நாகேந்திரன்!

இளைஞா் நீதிக் குழும உறுப்பினா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

கூப்பர் கானோலி 5 விக்கெட்டுகள்: 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி!

ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT