ஜம்மு - காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் 380 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
1910 ஆம் ஆண்டு முதல் 24 மணிநேரத்தில் பதிவான அதிகபட்சம் மழை இதுவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் ஆகஸ்ட் மாதத்தின் சராசரி மழை அளவு 403 மி.மீ. மட்டுமே.
ஜம்மு - காஷ்மீரில் திடீரென பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அண்டை மாநிலமான பஞ்சாபிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, நான்காம் நாளாக மழை பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தோடா மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், திரிகூட மலையின் உச்சியில் உள்ள புனிதத் தலமான வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளனர். இதுவரை 32 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
20 -க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஜம்மு - காஷ்மீரில் அபாய அளவைக் கடந்து ஓடும் ஆறுகள், நிலச்சரிவுகள், அடித்துச் செல்லப்பட்ட சாலைகள், இடிந்து விழும் கட்டடங்கள் என சமூக ஊடகங்களில் பல்வேறு காட்சிகள் பரவி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.