சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சூட்டில் 12 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இத்துடன், இந்த நடவடிக்கையில் மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 3 வீரர்களும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஜப்பூரில், தண்டேவாடா மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள வனப் பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையின் கோப்ரா பிரிவினர், மாவட்ட ரிசர்வ் காவல் படையினர், சத்தீஸ்கர் காவல் துறையினர் இணைந்து நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இன்று (டிச. 3) ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையில் கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில், 12 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பிஜப்பூர் மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த மோனு வடாடி, துகாரு கோண்டே மற்றும் ரமேஷ் சோதி ஆகிய மூன்று வீரர்களும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், தாக்குதல்களில் 2 வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக, சத்தீஸ்கரில் 2025 ஆம் ஆண்டில் மட்டும் 275 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்து மதத்தில் எத்தனை கடவுள்கள்? ரேவந்த் ரெட்டி கருத்துக்கு வலுக்கும் கண்டனங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.