வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் பாஜக, தனது சொந்த கல்லறையை தோண்டுவதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி எச்சரித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர்-க்கு எதிப்பு தெரிவித்து மாநில முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசுகையில், ``வாக்காளர்களைத் தொல்லைப்படுத்தும் நோக்கிலேயே எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளப்படுகிறது.
எஸ்ஐஆர் சதித்திட்டத்தின் பின்னணியில் அமித் ஷா தான் இருக்கிறார். அவர் மேற்கு வங்கத்தை எந்த விலையிலும் வாங்கத் தயாராக இருக்கிறார். அதற்கான தகுந்த பதில் அவருக்கு அளிக்கப்படும்.
மேற்கு வங்கமும் பிகாரும் ஒரே மாதிரியானவை அல்ல. மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணியை மேற்கொள்வதன் மூலம், பாஜக தனக்கான கல்லறையையே தோண்டுகிறது.
இருப்பினும், எஸ்ஐஆரை திரிணமூல் காங்கிரஸ் எதிர்க்கவில்லை. ஆனால், அதனை நடத்த போதிய நேரம் வழங்க வேண்டும். பாஜகவின் அரசியலுக்காக இதனை அவசரப்படுத்த முடியாது.
எஸ்ஐஆர் குறித்து உதவுவதற்காக டிச. 12 முதல் உதவிமைய முகாம்களை திரிணமூல் காங்கிரஸ் தொடங்குகிறது.
மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு உரிய நிதியை வழங்கவில்லை. அவர்கள் முழு நாட்டையும் கைப்பற்றி விட்டனர். இது ஒரு அவசரநிலை போன்றது. நீங்கள் அவசரநிலையை விதிக்க விரும்பினால், நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: சஞ்சாா் சாத்தி செயலி தொடர்பான உத்தரவை திரும்பப் பெற்றது மத்திய அரசு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.