மிசோரம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஸ்வராஜ் கௌஷல் இன்று (டிச. 4) காலமானார்.
மிசோரம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் வழக்கறிஞருமான ஸ்வராஜ் கௌஷல் (வயது 73) இன்று மதியம் நெஞ்சுவலி காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சுவராஜ் கௌஷல் காலமானார் என தில்லி பாஜக அறிவித்துள்ளது. மேலும், அவரது இறுதிச் சடங்கு லோதி சாலையில் உள்ள மயானத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் ஆளுநர் ஸ்வராஜ் கௌஷலின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஸ்வராஜ் கௌஷல் மறைந்த முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஆவார். மேலும், இவர்களது மகள் பன்சூரி ஸ்வராஜ் புது தில்லி தொகுதியின் பாஜக மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: புதினை சந்திக்க அனுமதி மறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.