காங்கிரஸ் ஏன் தொடர்ந்து தோல்வியடைவதாக மக்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தம் மீதான விவாதத்தின்போது மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
மக்களவையில் எஸ்ஐஆர் குறித்து அமித் ஷா பேசுகையில், ``ராணுவ நடவடிக்கை குறித்து நீங்கள் (காங்கிரஸ்) கேள்வி எழுப்பினீர்கள், தோல்வியடைந்தீர்கள்.
பாலகோட் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பினீர்கள், தோல்வியைந்தீர்கள். ராமர் கோயிலை எதிர்த்தீர்கள், தோல்வியடைந்தீர்கள்.
நான் மீண்டும் எச்சரிக்கிறேன். நீங்கள் தொடர்ந்து எஸ்ஐஆரையும் எதிர்த்தால், நீங்கள் மீண்டும் தோல்வியடைவீர்கள்’’ என்று தெரிவித்தார்.
மேலும், வாக்குத் திருட்டு மூலமே முன்னாள் பிரதமர்கள் நேருவும் இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாகவும் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
இதையும் படிக்க: வாக்குத் திருட்டு மூலமே நேருவும் இந்திராவும் பிரதமரானார்கள்! அமித் ஷா பேச்சு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.