ஆர்சிபி வெற்றி விழாவில் சித்தராமையா, சிவக்குமார். PTI
இந்தியா

பெங்களூர் சின்னசாமி திடலில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள்! நற்பெயருக்காக அனுமதி: டி.கே. சிவக்குமார் பேச்சு!

பெங்களூர் சின்னசாமி திடலில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பெங்களூரின் நற்பெயருக்காக, சின்னசாமி திடலில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் உள்ள சின்னசாமி திடலில், சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு, கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து, செய்தியாளர்களுடன் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியதாவது:

“ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து முடிவு செய்துள்ளோம். கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவிடம் கிரிக்கெட் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்த நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.

திடலில் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அங்கு ஏற்பட்ட சம்பவத்தால் (கூட்டநெரிசல்) பெங்களூரின் நற்பெயர் கெட்டுப்போவதை நாங்கள் விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, நிகழாண்டில் (2025) நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணி முதல்முறையாகக் கோப்பையை வென்றது. இதனால், சின்னசாமி திடலில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 13 பேர் பலியாகினர்.

இதையடுத்து, சின்னசாமி திடலில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 6 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை

D.K. Shivakumar said that permission has been granted to hold cricket matches again at Chinnaswamy Stadium for the sake of Bengaluru's image.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராமதியில் அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு! ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக ரத்ததான முகாம்

ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறையை திறக்கக் கோரிக்கை

சுவா் இடிந்து விழுந்து வடமாநில இளைஞா் உயிரிழப்பு

மிதுன ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT