காங்கிரஸ் எம்.பி.க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிச. 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அவையில் தேர்தல் சீர்திருத்தம், எஸ்ஐஆர், இண்டிகோ விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
வருகிற டிச. 19 ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவு பெற உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது அவையில் நடைபெற்று வரும் விவாதங்கள், இனி எழுப்ப வேண்டிய மக்கள் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது.
எஸ்ஐஆர் தொடர்பான விவாதத்தில் ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதன்பின்னர் அவையில் பேசிய அமித் ஷா, காங்கிரஸையும் நேருவையும் குற்றம்சாட்டினார். தான் எழுப்பிய கேள்விகளுக்கு அமித் ஷா இன்னும் பதிலளிக்கவில்லை என்று ராகுல் கூறி வருகிறார்.
இந்நிலையில் இன்று ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்களுடன் அவையின் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தை நடத்துகிறார்.
இதையும் படிக்க | மும்பை குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் பதவியை துறந்தவர்! யார் இந்த சிவராஜ் பாட்டீல்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.