நிதின் நபின் படம் - எக்ஸ்
இந்தியா

பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம்!

ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், பாஜக புதிய தேசிய செயல் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பாஜக தேசிய செயல் தலைவராக பிகார் அமைச்சர் நிதின் நபின் (45) இன்று (டிச., 14) நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய செயல் தலைவராக இருந்த ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், பாஜக நாடாளுமன்ற குழு ஆலோசித்து நிதின் நபினை நியமித்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் நபி கிஷோர் சின்ஹாவின் மகனான நிதின் நபின், தற்போது பொதுப்பணித் துறை அமைச்சராக உள்ளார்.

இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக பிகார் அமைச்சர் நிதின் நபினை பாஜக நாடாளுமன்ற கூட்டுக் குழு தேர்வு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதின் நபின் யார்?

நிதின் நபின் பாட்னாவில் பிறந்தவர். தந்தை நபி கிஷோர் சின்ஹாவின் இறப்புக்குப் பிறகு முழு நேர அரசியலுக்கு வந்தவர்.

பிகாரின் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக உள்ள நிதின் நபின், வலுவான ஆர்.எஸ்.எஸ். பின்னணி உடையவர்.

இதோடுமட்டுமின்றி பிகார் அரசியலில் பாஜகவின் கூர்மையான வியூக வகுப்பாளராகவும் அறியப்படுகிறார். பாஜகவுக்காக இளைஞர்கள் பலரை ஒன்று திரட்டியவர்.

பிகாரின் பான்கிபூர் நகரத் தொகுதியில் 2010, 2015, 2020 மற்றும் 2025 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் இளைஞர் அணித் தலைவராகவும் நிதின் நபின் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bihar Minister Nitin Nabin appointed as the National Working President of the BJP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT