லண்டனில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் ஹைதராபாத்திற்கு பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம் நேற்று புறப்பட்டது. விமானத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
இந்த நிலையில், விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்த நிலையில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் விமான கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து ஹைதராபாத் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. பின்னர். விமானத்திலிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டு விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. இதையடுத்து இன்று ஹைதராபாத்திலிருந்து விமானம் மீண்டும் லண்டன் புறப்பட்டுச் சென்றது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மாத தொடக்கத்தில், இண்டிகோவின் மதினா-ஹைதராபாத் மற்றும் ஷார்ஜா-ஹைதராபாத் விமானங்களைக் குறிவைத்து மின்னஞ்சல்கள் விமான நிலையத்திற்கு தனித்தனியாக வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.