தில்லி தேர்தல் -
இந்தியா

தில்லி தேர்தல் நிலவரம்: 27 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக

தில்லி தேர்தல் நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது 27 ஆண்டுகளுக்குப் பின் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது.

DIN

தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், காலை 10 மணி நிலவரப்படி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கம் முதல் பின்னடைவை சந்தித்து வந்த கேஜரிவால், புது தில்லி தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். பர்வேஷ் வெர்மா பின்னடைவை சந்தித்துள்ளார். 2013ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வரும் கேஜரிவால், முதலில் பின்னடைவை சந்தித்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கடுத்த தொகுதியாக கல்காஜி உள்ளது. இங்கும், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தில்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி, வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.

ஒருவேளை அடுத்தடுத்த சுற்றுகளில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றாலும் கூட, பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்குமா என்பது சந்தேகம் என்றும் கடந்த இரண்டு தேர்தல்களின்போது பெற்ற வெற்றியைப் போல அது இருக்காது என்றும் கூறப்படுகிறது.

ஒரு பக்கம் புது தில்லியில் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாமல் கூட போகலாம். ஆனால், 70 தொகுதிகளில் அதிக இடங்களில், ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் தான் காரணமாக இருந்திருக்கும் என்று கூறப்படும் அளவுக்கு நிலைமை அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

SCROLL FOR NEXT