விமானம் 
இந்தியா

கேரள விமானத்தில் நடுவானில் பலியான 11 மாதக் குழந்தை!

கொச்சி வந்துகொண்டிருந்த விமானத்தில் 11 மாதக் குழந்தை பலியானது பற்றி...

DIN

கொச்சி நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தில் தாயுடன் பயணித்த 11 மாதக் குழந்தைக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பாட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை பலியானது.

கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து கொச்சி நோக்கி வந்துகொண்டிருந்த கல்ஃப் ஏர் விமானத்தில் ஃபெசின் அகமது என்ற 11 மாதக் குழந்தை தனது தாயுடன் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கொச்சி விமான நிலையத்துக்கு தகவலளித்த நிலையில், விமானம் தரையிறங்கியவுடன் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அங்கமாலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விமானத்தில் திடீரென குழந்தை உயிரிழந்ததால், பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் குழந்தையின் உடலை அனுப்பிவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'பளிச்' சருமத்துக்கு ஹைட்ரா பேஷியல்!

காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிற்சி!

கெங்கவல்லியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

பிஞ்சுக் கைவண்ணம்

ஆட்டுக் குட்டி

SCROLL FOR NEXT