சுட்டுக் கொலை 
இந்தியா

பாகிஸ்தானில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: ஊடுருவல் முறியடிப்பு!

ஆப்கானிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற 30 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற 30 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ ஊடகப் பிரிவு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ராணுவ ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில்,

புதன்கிழமை இரவு வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தின் ஹசன் கேல் பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையைத் தாண்டி ஊடுருவும் முயற்சிகளைப் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்ததாக ஐஎஸ்பிஆர் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் படையினர் துல்லியமாகவும், சரியான நேரத்தில் நடத்தப்பட்ட நடவடிக்கையில், பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்ற பெரிய குழு பயங்கரவாதிகளின் நடமாட்டத்திற்குப் பதிலளிக்கும் வகையில் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றி எங்கள் எச்சரிக்கை உளவுத்துறை வலையமைப்பின் செயல்திறனையும், எங்கள் படைகளின் செயல்பாட்டு சிறப்பையும் எடுத்துக்காட்டுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களுக்கு "வெளிநாட்டு முகவர்கள்" தங்கள் பிரதேசத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பொறுப்பை ஆப்கானிஸ்தான் ஏற்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டது.

At least 30 terrorists were killed while trying to infiltrate from Afghanistan in northwest Pakistan's Khyber Pakhtunkhwa province, the military media wing said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

8% வளா்ச்சி கண்ட இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை

தொடரை டிரா செய்யும் முனைப்பில் இந்தியா- இன்று கடைசி டெஸ்ட் தொடக்கம்

3-ஆவது சுற்றில் ஸ்வெரெவ், ரூட்

லக்ஷயா சென், ரக்ஷிதா ஸ்ரீ 2-ஆவது சுற்றுக்குத் தகுதி

புலவயோ டெஸ்ட்: ஜிம்பாப்வே 149

SCROLL FOR NEXT