கோப்புப் படம் 
இந்தியா

எத்தனால் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! 12 பேர் கைது!

தெலங்கானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DIN

தெலங்கானாவின் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில், எத்தனால் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறையால் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில், எத்தனால் ஆலை அமைக்க தெலங்கானா அரசு தனியார் நிறுவனத்துக்கு அனுமதியளித்துள்ளது. இதனை எதிர்த்து, அம்மாவட்டத்தின், சுமார் 7 முதல் 8 கிராமங்களைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள், ராஜோலி மண்டல் பகுதியில் நேற்று (ஜூன் 4) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், அந்த ஆலையின் நிறுவனத்தால், அமைக்கப்பட்டிருந்தத் தற்காலிக முகாம்கள் மற்றும் சரக்குப் பெட்டிகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அங்கு உடனடியாக காவல் துறையினர் விரைந்து வன்முறையைக் கட்டுப்படுத்தினர்.

இந்நிலையில், முகாம்களுக்கு தீ வைத்தது மற்றும் கலவரம் உண்டாக்கியது, ஆகிய பிரிவுகளின் கீழ் ராஜோலி காவல் நிலையத்தில் ஆலையின் நிர்வாகத்தினர் புகாரளித்தனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முன்னதாக, அம்மாவட்டத்தின் பெத்தா தன்வாடா கிராமத்துக்கு அருகில் சுமார் 35 முதல் 40 ஏக்கர் பரப்பளவில், தானியம் சார்ந்த எத்தனால் ஆலை அமைக்க தனியார் நிறுவனம் ஒன்று அனுமதி பெற்றுள்ளது.

இதுகுறித்து, அங்குள்ள கிராமவாசிகளிடம் அந்த நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு! - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் சமூகத்தின் வரலாற்று ஆய்வை மேற்கொள்ள மாதம் ரூ.50,000 உதவித்தொகை: அமைச்சா் கோவி.செழியன்

கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சிறைக் கைதி தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட விவகாரம்: உதவி ஜெயிலா் மீது நடவடிக்கை

மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி வேண்டும்: பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

அறந்தாங்கி வாரச் சந்தையில் புதிய பேருந்து நிலையம்: இடம் தோ்வுக்கு எதிா்ப்பு!

SCROLL FOR NEXT