விபத்துப் பகுதி 
இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்து! கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? விடியோ

ஏர் இந்தியா விமான விபத்தின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன என்பது பற்றி

DIN

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் இன்று பகல் 1.43 மணிக்கு விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விமானம் ஆமதாபாத் சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூன் 12ஆம் தேதி பகல் 1.38 மணிக்குப் புறப்பட்டது. விமானம் ஓடுபாதையிலிருந்து புறப்பட்டு மேலெழும்பியது. விமானம் புறப்பட்ட வேகம் நீடிக்கவில்லை. மேலெழும்பவே பெரிதும் போராடியது. தொடர்ந்து மேலெழும்ப முடியாமல் வளைந்து, வேகமாக கீழே இறங்கத் தொடங்கியது. சற்று வினாடிக்கெல்லாம் விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இது அனைத்தும், விமானம் விபத்துக்குள்ளாகும்போது எடுக்கப்பட்ட விடியோவில் பதிவாகியிருக்கிறது.

இதையும் படிக்க.. விமானியிடமிருந்து வந்த அவசர அழைப்பு, ஆனால் பேசவில்லை! மே டே கால் என்றால்?

1.38 மணிக்குப் புறப்பட்ட சில வினாடிகளில் அதாவது 1.39 மணிக்கெல்லாம் மே டே கால் எனும் அவசர அழைப்பு வந்துள்ளது. அழைப்பு வந்த ஒரு சில வினாடிகளில் அழைப்புத் துண்டிக்கப்பட்டு விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

விமானத்தை இயக்கிய விமானி, மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்கள் என்றும், விமானம் 11.5 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது, அங்கிருந்த மருத்துவ மாணவர்கள் விடுதிக் கட்டடம் என்பதால், அவர்களின் நிலை என்னவானது என்று தெரியவரவில்லை.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் 169 பேர் இந்தியர்கள் என்றும், 53 பேர் பிரிட்டீஷ் நாட்டவர் என்றும், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர், ஏழு பேர் போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

குஜராத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. விமானம் விழுந்தபோது, கட்டடமும் தீப்பற்றி எரிந்ததாகவும், இதனால், அதில் இருந்த மருத்துவர்களின் நிலை குறித்து குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். மேலும் படிக்க..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக எம்பி மனோஜ் திவாரி கன்வாா் யாத்திரை

வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு பரவல்! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்; 2-வது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே தடுமாற்றம்!

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

பாஜகஉறவு முறிந்தது! கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அணி அறிவிப்பு!-பண்ருட்டி ராமச்சந்திரன்

SCROLL FOR NEXT