பிரதிப் படம் ENS
இந்தியா

ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு! உண்மையைக் கூறிய ஊழியர்கள் பணிநீக்கம்!

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு புகார் தெரிவித்ததால், பணிநீக்கம் செய்யப்பட்டதாக பிரதமருக்கு விமான ஊழியர்கள் கடிதம்

DIN

கடந்தாண்டில் லண்டனுக்கு இயக்கப்பட்ட போயிங் விமானத்தில் கோளாறு இருந்ததைச் சுட்டிக் காட்டிய, 2 விமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யபட்டதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து சம்பவத்தால், போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கடந்தாண்டில் ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானத்தில் கோளாறு இருந்ததை சுட்டிக்காட்டிய ஊழியர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

கடந்தாண்டு, மே 24 ஆம் தேதியில் மும்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா போயிங் 787 விமானம், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறக்கத்தின்போது, கதவைத் திறப்பதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து, ஏர் இந்தியா நிர்வாகத்திடம் விமான ஊழியர்கள் புகார் தெரிவித்து, அறிக்கை அளித்தனர். ஆனால், அவர்களின் புகார்களை மறுத்த நிர்வாகம், அறிக்கையை மாற்றியமைக்குமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அறிக்கையை மாற்றியமைக்க மறுப்பு தெரிவித்ததால், அடுத்த 48 மணிநேரத்துக்குள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏர் இந்தியாவின் இரண்டு முன்னாள் ஊழியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதையும் படிக்க: இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியா? தமிழகத்திலும் கரை ஒதுங்கிய துடுப்பு மீன்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாப் கியர்(ரா) மாடல்!

மாதத்துக்கு 4 நாள்கள் அசைவம், ரூ.540 தினக்கூலி! பிரஜ்வல் ரேவண்ணாவின் சிறை வாழ்க்கை

பிங்க் பியூட்டி... ஐஸ்வர்யா ராஜேஷ்!

நீதிமன்றம் கண்டனம்: இது கட்சிகளின் ஜனநாயக உரிமை! - ராகுலுக்கு இந்தியா கூட்டணி ஆதரவு

ஒருவர் மட்டுமே வாழும் சிவகங்கை நாட்டாகுடி கிராமம்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT