கைது  
இந்தியா

பஞ்சாயத்து அலுவலரிடம் மராத்தியில் பேசுமாறு சண்டையிட்ட நபர் கைது!

கர்நாடகத்தில் அரசு ஊழியரை மராத்தியில் பேசுமாறு தகாத வார்த்தைகளால் திட்டிய நபர் கைது.

DIN

கர்நாடக அரசு ஊழியரை மராத்தியில் பேசுமாறு தகாத வார்த்தைகளால் திட்டிய நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சினைக்காக கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு நேற்று சென்றுள்ளார்.

அங்கு பணியிலிருந்த பஞ்சாயத்து மேம்பாட்டு அலுவலர் நாகேந்திர பட்டர் என்பவரிடம் கன்னடத்திற்குப் பதிலாக மராத்தியில் தனது சொத்து தொடர்பான ஆவணங்களைத் தருமாறு கூறியதுடன் அவரை மராத்தியில் பேசுமாறு திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையும் படிக்க | ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசு அலுவலரை அவர் திட்டும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து, பெலகாவி கிராமப்புற காவல் நிலைய அதிகாரிகள் அந்த நபரை இன்று கைது செய்தனர்.

அதிகாரியை அவர் திட்டிய வீடியோ வைரலாக பரவி வருகிறது, அதைத் தொடர்ந்து பெலகாவி கிராமப்புற காவல் நிலைய அதிகாரிகள், அதிகாரியை திட்டியதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில், "அரசு அதிகாரிகளுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சம்பந்தப்பட்ட நபர் மீது அரசு ஊழியரைத் தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்,

பெலகாவி பகுதியில் கடந்த மாதம் பயணி ஒருவரிடம் மராத்தியில் பதிலளிக்காததால் அரசுப் பேருந்தின் நடத்துனரைத் தாக்கியதற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT