கோப்புப் படம் 
இந்தியா

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானியர் கைது!

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சட்டவிரோதமாக இந்தியாவினுள் நுழைந்த பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா - பாகிஸ்தானின் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு வழியாக சட்டவிரோதமாக ஊடுருவிய பாகிஸ்தான் இளைஞரை இன்று (மே.6) பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டு எல்லையில் போர்ப் பதற்றம் நிலவி வருகின்றது.

இந்நிலையில், தற்போது எல்லையைக் கடந்து இந்தியாவின் சாகான் - டா- பாக் எனும் கிராமத்தில் கைது செய்யப்பட்ட அந்த இளைஞரிடம் பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தர்கால் எனும் கிராமத்தைச் சேர்ந்த வகாஸ் (வயது 26) என்பது தெரியவந்துள்ளது.

மேலும், அவரிடமிருந்து சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றும் அவர் எதிர்பாராத விதமாக இந்திய எல்லையினுள் நுழைந்துவிட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: போர்ப் பாதுகாப்பு ஒத்திகை: தொண்டர்களுக்கு பாஜக அழைப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT