ஜம்மு - காஷ்மீர் பகுதி PTI
இந்தியா

பாக். தாக்குதலில் இந்தியத் தரப்பில் உயிரிழப்பு இல்லை: ராணுவம்

பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியா தரப்பில் எந்தவித உயிரிழப்புகளும் இல்லை என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதலில் இந்தியா தரப்பில் எந்தவித உயிரிழப்புகளும் இல்லை என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு, பதான்கோட், உதம்பூர், ராணுவ நிலையங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும், அவற்றை இந்திய ராணுவம் முறியடித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், நடுவானிலேயே இந்திய ராணுவம் அவற்றை தாக்கி அழித்தது.

இதனைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அனைவரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லைப் பகுதிகளில் விமானப் படையினரும் ராணுவத்தினரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி நடத்தியதன் விளைவாக ஜம்மு - காஷ்மீர் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதையும் படிக்க | போர்ப் பதற்றம்: இருளில் மூழ்கியது ஜம்மு - காஷ்மீர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT