கர்னல் சோபியா குரேஷி.. 
இந்தியா

பாகிஸ்தானின் ஏவுகணை, டிரோன்கள் நடுவானில் தாக்கி அழிப்பு! - கர்னல் சோபியா குரேஷி

பாகிஸ்தானின் ஏவுகணை, டிரோன்கள் நடுவானில் தாக்கி அழிக்கப்பட்டதாக கர்னல் சோபியா குரேஷி விளக்கமளித்துள்ளார்.

DIN

பாகிஸ்தானின் ஏவுகணை, டிரோன்கள் நடுவானில் தாக்கி அழிக்கப்பட்டதாக கர்னல் சோபியா குரேஷி விளக்கமளித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்ற பெயரில், இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரு நாடுகளும் சரிமாரியாக தாக்குதல் நடத்திய நிலையில், புதன்கிழமை அதிகாலையில் 9 பயங்கரவாத முகாம்கள் அழித்து ஒழிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி பேசுகையில், “ஸ்ரீநகர், லூதியானா, பூஜ், ஜம்மு உள்ளிட்ட இடங்களை நோக்கி டிரோன்கள், ஏவுகணைகளை வீசி பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்தியா ராணுவ நிலைகளை பாகிஸ்தான் தாக்க முயன்றது.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 16 அப்பாவிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, அடம்பூர், பதிண்டா, சண்டீகர், நல், பலோடி, உத்தரலை மற்றும் பூஜ் உள்பட வடக்கு - மேற்கு இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் குறிவைத்து தாக்க முயற்சித்தது. இந்த நிலையில், ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் நடுவானிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டன” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

SCROLL FOR NEXT