ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா (கோப்புப் படம்) 
இந்தியா

ராஜஸ்தானில் அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து; எல்லையோர மாவட்டங்களுக்கு ரூ.5 கோடி விடுவிப்பு!

ராஜஸ்தானில் உள்ள அரசு ஊழியர்களுக்கு விடுமுறையை ரத்து செய்து அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

DIN

ராஜஸ்தானில் உள்ள அரசு ஊழியர்களுக்கு விடுமுறையை ரத்து செய்து அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டுள்ள நிலையில், எல்லையோர மாநிலங்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. போர் தொடங்கிவிட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் எல்லையோர மாநிலங்கள் ஈடுபட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்தும், மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான பார்மெர், ஜெய்சால்மர், பிக்கானர் மற்றும் ஸ்ரீகங்காநகருக்கு தலா ரூ. 5 கோடி விடுவித்தும் அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பஜன்லால் சர்மா கூறியதாவது: எங்களது மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. பாதுகாப்பு காரணத்தைக் கருத்தில்கொண்டு பார்க்கையில், ராஜஸ்தான் மிகவும் முக்கிமான இடத்தில் அமைந்துள்ளது. இந்த அவசரநிலையில் நாம் அனைவரும் சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமை நமக்கு இருக்கிறது என்றார்.

எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன், அவசரகால சூழ்நிலைகளை சமாளிக்க நிதியுதவியாக எல்லையோர மாவட்டங்களுக்கு தலா ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளான உணவு, மருத்துவ சேவை, குடிநீர் மற்றும் மின் விநியோகம் போன்ற துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

SCROLL FOR NEXT