பாகிஸ்தான் தூதரகம் PTI
இந்தியா

பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணிநேரத்திற்குள் வெளியேற உத்தரவு!

பாகிஸ்தான் தூதரக அதிகாரி, அப்பதவிக்குரிய பணிகளுக்கு மாறான செயல்களைச் செய்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

DIN

தில்லியில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், 24 மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரி, அப்பதவிக்குரிய பணிகளுக்கு மாறான செயல்களைச் செய்வதால், வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்து மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''புது தில்லியில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் உயர் ஆணைய தூதரகத்தில் பணிபுரிந்துவரும் அந்நாட்டு அதிகாரி, இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அப்பொறுப்புக்குரிய பணிகளுக்கு மாறான செயல்களில் ஈடுபடுகின்றார். இதனால், அவர் 24 மணிநேரத்துக்குள் இந்தியாவில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். பாகிஸ்தான் அதிகாரியின் செயல்களைக் கண்டிக்கும் வகையில் அந்நாட்டு தூதரகத்துக்கு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த நான்கு நாள்களுக்கும் மேலாக ராணுவ மோதல் நிலவிவந்த நிலையில், அரசுத் தரப்பில் இருந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | முப்படைகள் மூலம் பாகிஸ்தானுக்கு உரிய பாடம்: மோடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிங்டம் ஓடிடி தேதி!

அறிவியல் சார்ந்து, முற்போக்கு சிந்தனையோடு கல்வித்துறையை நடத்தி வருகிறோம் - Anbil Mahesh

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

EPS செய்தது தவறான முன்னுதாரணமாக ஆகக் கூடாது! - எழிலன்

என் காதலன் எனக் கூறினால் ஏமாற வேண்டாம்: சின்ன மருமகள் நடிகை வேண்டுகோள்!

SCROLL FOR NEXT