கோப்புப் படம் 
இந்தியா

மணிப்பூரில் அதிரடி நடவடிக்கை! 2 நாள்களில் 6 கிளர்ச்சியாளர்கள் கைது!

மணிப்பூரில் வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்...

DIN

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 நாள்களில், 6 கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தின் லாங்மெய்தாங், எலாங்காங்போக்பி மற்றும் காக்சிங் நிங்தௌ பரேங் ஆகிய பகுதிகளில் பதுங்கியிருந்த தடைசெய்யப்பட்ட பீப்பள்ஸ் லிபரேஷன் ஆர்மி எனும் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தௌபல் மாவட்டத்தில் காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரும், கிழக்கு இம்பாலில் கே.சி.பி. எனும் இயக்கத்தில் பணியாற்றிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், மேற்கு இம்பால் மாவட்டத்திலும் கே.சி.பி. - பி.எஸ்.சி. அமைப்பில் செயல்பட்டு வந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கைகள் அனைத்தும், கடந்த மே 19 மற்றும் மே 20 ஆகிய இருநாள்களில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், கைது செய்யப்பட்ட கிளர்ச்சியாளர்களிடம் இருந்து துப்பாக்கிகள், அதன் தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், கார்கே மரியாதை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் பணி: விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள்

பென்ஸ் படத்தில் ரவி மோகன்!

விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் : முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து

வாக்குத் திருட்டைத் தொடர்ந்து ரேசன் அட்டையையும் நிலத்தையும் இழக்க நேரிடும்: வாக்காளர்களுக்கு ராகுல் எச்சரிக்கை!

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக போராட்டம்! என்ன நடக்கிறது?

SCROLL FOR NEXT