ரந்தீர் ஜெய்ஸ்வால்  Center-Center-Delhi
இந்தியா

பயங்கரவாதத்தை நிறுத்தச் சொல்லுங்கள்.. துருக்கிக்கு இந்தியா அழுத்தம்!

பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தச் சொல்லுமாறு துருக்கிக்கு இந்தியா அழுத்தம்!

DIN

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படியும், பாகிஸ்தானுடன் நல்லுறவில் இருக்கும் துருக்கி வலியுறுத்த வேண்டும் என்று இந்தியா தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அண்டை நாட்டின் மீது எல்லைத் தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும், பல ஆண்டுகாலமாக பாகிஸ்தான் மண்ணிலிருந்து இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானை துருக்கி நிச்சயம் வலியுறுத்தும் என்று மத்திய வெளியுறவு விவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கவலைகளை உணர்ந்துகொள்வதன் அடிப்படையில்தான் உறவுகள் உண்டாகின்றன என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

துருக்கியைச் சேர்ந்த நிறுவனம், நாட்டில் உள்ள 9 விமான நிலையங்களின் பாதுகாப்பு சேவைகளை வழங்கி வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்தியாவில் உள்ள துருக்கி தூதரகம் மூலம் இந்த விவகாரம் பேசப்பட்டு வருகிறது என்று ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் சண்டையின்போது, பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்கள் அனைத்தும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இந்தியா - துருக்கி இடையேயான உறவு மோசமடைந்துள்ள நிலையில் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

SCROLL FOR NEXT