மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட ஐக்கிய குகி தேசிய ராணுவத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய தீவிரவாதிகள் இருப்பது குறித்த தகவல்களின் அடிப்படையில், மாவட்டத்தின் ஹெங்லெப் துணைப் பிரிவின் கீழ் உள்ள கான்பி கிராமத்தில் அதிகாலை 5.30 மணியளவில் பாதுகாப்புப் படையினர் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசு மற்றும் குகி மற்றும் சோமி தீவிரவாதக் குழுக்களுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட நடவடிக்கை இடைநிறுத்த ஒப்பந்தத்தில் ஐக்கிய குகி தேசிய ராணுவம் கையெழுத்திடவில்லை. இந்த நடவடிக்கையின்போது, ராணுவ வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரி கூறினார்.
துப்பாக்கிச் சண்டையின்போது நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் அந்த இடத்தை விட்டுத் தப்பிச் சென்றதாக அதிகாரி கூறினார், இறந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.