பிகார் பேரவைத் தேர்தலுக்கு மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுலா சவாரி செல்வதாக பாஜக விமர்சித்துள்ளது.
மத்திய பிரதேசம் சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் விடியோவை பகிர்ந்த பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேஹ்ஷாத் பூனவல்லா, ``ராகுல் காந்தியை பொறுத்தவரை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது சுற்றுலா அல்லது கொண்டாட்டம் என்றுதான் பொருள். பிகார் தேர்தலுக்கு மத்தியிலும்கூட அவர் சுற்றுலா செல்கிறார்.
பிகாரில் தேர்தல்; ஆனால், ராகுல் காட்டில் சுற்றுலா சவாரி செல்கிறார். இதுவே காட்டுகிறது - அவருக்கு எது முன்னுரிமை என்று.
ஆனால், தேர்தலில் தோற்றால் தேர்தல் ஆணையத்தின் மீது பழியைப் போட வேண்டியது. அதுமட்டுமின்றி, எச் ஃபைல்ஸ் என்று ஒரு பவர் பாயின்ட்-டும் போட்டுக் காட்ட வேண்டியது’’ என்று விமர்சித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமில் கலந்துகொள்ள நர்மதாபுரம் சென்ற ராகுல் காந்தி, ஞாயிற்றுக்கிழமையில் சவாரி பயணம் மேற்கொண்டார்.
இதையும் படிக்க: பிகார்: பாலம் இல்லையெனில், வாக்குகளும் இல்லை!! 77 ஆண்டுகளாக கிராமப் போராட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.