தில்லி செங்கோட்டை அருகேவுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் கார் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கார் வெடிவிபத்து தொடர்பாக காவல் ஆணையருடன் தொடர்பில் இருந்து தகவல்களை கேட்டறிந்த பிறகு செய்தியாளர்களுடன் அமித் ஷா பேசியதாவது,
தில்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த விபத்து குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். கார் வெடித்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்துக்கும், படுகாயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கும் செல்லவுள்ளேன். அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவுள்ளேன். கார் வெடி விபத்துக்கு பின்புலத்தில் செயல்பட்டவர்கள் யார் என்பதை விசாரணை நடத்தி முழு உண்மையை மக்கள் முன்பு வைப்போம் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.