மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ANI
இந்தியா

2 நிமிடம் தாமதம்... ராகுலுக்கு தண்டனை அளித்த காங்கிரஸ் நிர்வாகி! ஏன்?

ராகுல் காந்திக்கு காங்கிரஸ் நிர்வாகி தண்டனை அளித்தது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

காங்கிரஸ் பயிற்சி முகாமுக்கு தாமதமாக வருகைதந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டது.

மத்திய பிரதேச மாநிலம், பச்மார்ஹியில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இந்த பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தி கலந்துகொண்ட நிலையில், பிகார் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு நேரடியாக வந்ததால் இரண்டு நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பயிற்சி முகாமுக்கு தாமதமாக வருபவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் பயிற்சிப் பிரிவின் தலைவர் சச்சின் ராவ், 10 புஸ்-அப்ஸ் தண்டனை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்த ராகுல் காந்தியும் அனைவரின் முன்னிலையில் 10 புஸ்-அப்ஸ் தண்டனையை செய்தார்.

இதுதொடர்பாக ம.பி. காங்கிரஸில் செய்தித் தொடர்பாளர் அபினவ் பரோலியா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ராகுல் காந்தி இதைச் செய்வது ஒன்றும் புதிதல்ல, எங்கள் முகாமில் ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறோம். கட்சியின் அனைவரையும் சமமாக நடத்தும் ஜனநாயகம் உள்ளது. பாஜாகவைப் போல் எங்கள் கட்சியில் முதலாலித்துவம் கிடையாது” என்றார்.

இந்த முகாமில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, வாக்குத் திருட்டை மறைக்கதான் எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

2 minutes late... Congress executive punished Rahul! Why?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து!

வாராந்திர ரயில்களின் சேவைகள் நீட்டிப்பு

அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும் கடகத்துக்கு: தினப்பலன்கள்!

திமுக தோ்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்: கனிமொழி எம்.பி.

தேமுதிக இண்டி கூட்டணிக்கு வரவேண்டும்: ஜோதிமணி எம்.பி.

SCROLL FOR NEXT