பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி எளிதாக 121 - 141 தொகுதிகளில் வெற்றி பெறும் என ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. மேலும், இந்தியா கூட்டணி 100 இடங்களுக்கு மேல் வெல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக நவ. 6 மற்றும் நவ. 11 ஆகிய இரண்டு நாள்களில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவுகளுக்குப் பிறகு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில், பெரும்பாலான முடிவுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறுகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா ஆகிய 5 கட்சிகள் உள்ளன.
மஹாகாத்பந்தன் எனப்படும் இந்தியா கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் ஆகிய கட்சிகள் உள்ளன.
கருத்துக் கணிப்பு முடிவுகள்
ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள்
என்டிஏ கூட்டணி : 121 - 141 தொகுதிகள்
இந்தியா கூட்டணி : 98 - 118 தொகுதிகள்
ஜன் சுராஜ் கட்சி : 0-2 தொகுதிகள்
மற்றவை : 1 - 5 தொகுதிகள்
மேட்ரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள்
என்டிஏ கூட்டணி : 147-167 தொகுதிகள்
இந்தியா கூட்டணி : 70-90 தொகுதிகள்
ஜன் சுராஜ் கட்சி : 0-2 தொகுதிகள்
தைனிக் பாஸ்கர் கருத்துக் கணிப்பு முடிவுகள்
என்டிஏ கூட்டணி : 145–160 தொகுதிகள்
இந்தியா கூட்டணி : 73–91 தொகுதிகள்
ஜன் சுராஜ் கட்சி : 0-3 தொகுதிகள்
மற்றவை : 5-7 தொகுதிகள்
பீபள்ஸ் பல்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள்
என்டிஏ கூட்டணி : 133-159 தொகுதிகள்
இந்தியா கூட்டணி : 75-101 தொகுதிகள்
ஜன் சுராஜ் கட்சி : 0-5 தொகுதிகள்
இதையும் படிக்க | வெளியானது ஃபரீதாபாத் பெண் மருத்துவர் ஷாஹீன் பின்னணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.