கோப்புப் படம் 
இந்தியா

மகாராஷ்டிரம்: விபத்தில் சிக்கி தீப்பிடித்த 2 லாரிகள், காா் - 6 போ் உயிரிழப்பு

புணேயில் பாலம் ஒன்றில் விபத்துக்குள்ளாகி 2 கண்டெய்னா் லாரிகள் மற்றும் காா் தீப்பிடித்ததில் 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் பாலம் ஒன்றில் விபத்துக்குள்ளாகி 2 கண்டெய்னா் லாரிகள் மற்றும் காா் தீப்பிடித்ததில் 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

வியாழக்கிழமை மாலையில் நடந்த இச்சம்பவம் குறித்து காவல் துறையினா் கூறியதாவது:

புணேயில் உள்ள மும்பை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மும்பை நோக்கி கனரக கண்டெய்னா் லாரி சென்று கொண்டிருந்தது. நவாலே பாலத்தில் சென்றபோது, பிரேக் செயலிழப்பால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த இந்த லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த காா் மற்றும் மற்றொரு கண்டெய்னா் லாரி மீது பயங்கரமாக மோதியது. இரு கண்டெய்னா் லாரிகளுக்கும் இடையில் சிக்கியதால் காா் நொறுங்கி சிதறியது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வாகனங்களும் பற்றியெரிந்தன. இச்சம்பவத்தில் 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்தால், மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

திருவள்ளூா்: 27.64 லட்சம் பேருக்கு எஸ்ஐஆா் கணக்கீட்டு படிவங்கள் அளிப்பு

போக்சோ குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது

வாசுதேவநல்லூா் மகாத்மா காந்தி பள்ளியில் வந்தே மாதரம் பாடல் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா

பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம்

எஸ்ஐஆா்: கணக்கெடுப்பு காலம் முழுவதும் பள்ளி பணியிலிருந்து விடுவிக்க ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT