பிகார் மாநிலத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராக நிதீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நவ. 20ஆம் தேதி அவர் பிகாரின் முதல்வராக 10வது முறையாக பதவியேற்கவிருக்கிறார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிகாரின் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராக நிதீஷ் குமார் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பிகார் மாநிலத்தின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக நிதீஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுபோல, பாஜக சட்டமன்றக் குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாளை முதல்வராக பதவியேற்கும் முன்பு, இன்று ஆளுநர் ஆரீஃப் முகமது கானை சந்தித்த நிதீஷ் குமார், தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்ததோடு, பேரவைத் தேர்தலில் இருக்கும் பெரும்பான்மைக்கான பட்டியலையும் அளித்துள்ளார்.
இதையடுத்து, பிகார் மாநிலம் பாட்னாவில் அமைந்துள்ள காந்தி அரங்கில், நவ.20, வியாழக்கிழமை பிகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மற்ற மாநில பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் இவ்விழாவில் பங்கேற்கிறார்கள்.
இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில், முதல்வராக நிதீஷ் குமார் பெயரை பரிந்துரை செய்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
பிகாரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பிரதமர் மோடி, உறுதிபூண்டுள்ளார் என்றும் தெரிவித்துக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.