பிகாரில் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ சஞ்சீவ் குமார் அக்கட்சியில் இருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.
முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், மாநிலத் தலைவர் மேன்கானி லால் மண்டல் உள்ளிட்டோர் முன்னிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் அவர் தன்னை இணைத்துக்கொண்டார்.
சஞ்சீவ் குமாரின் வருகை ககாரியா மாவட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் சஞ்சீவ் குமார் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகியிருப்பது அக்கட்சியிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பிகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.