பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிஃப் கோப்புப் படம்
இந்தியா

மீண்டும் போர் ஏற்பட்டால், முன்பைவிட சிறந்த முடிவை அடைவோம்: பாகிஸ்தான்

இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்பட்டால், முன்பைவிட சிறந்த முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிஃப் பேச்சு

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்பட்டால், முன்பைவிட சிறந்த முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிஃப் பேசியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பிரச்னை நிலவி வரும்நிலையில், இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்படுமாயின், முன்பைவிட சிறந்த முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கவாஜா பேசுகையில், ``இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை; ஆனால், அதற்கான அபாயங்கள் உண்மையானவை. அதனை மறுக்க முடியாது. மீண்டும் போர் ஏற்பட்டால், முன்பைவிட சிறந்த முடிவை நாங்கள் அடைவோம்.

ஔரங்கசீப் ஆட்சியின்கீழ் இருந்தபோது தவிர, இந்தியா ஒருபோதும் ஒன்றுபட்ட நாடாக இருந்தது கிடையாது. பாகிஸ்தான், அல்லாஹ்வின் பெயரால் உருவாக்கப்பட்டது. உள்நாட்டுக்குள் எங்களுக்குள் வாதமும் போட்டியும் இருந்தாலும், இந்தியாவுடனான போரில் ஒன்றுபடுகிறோம்’’ என்று தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஆதரிப்பதை அரசு நிறுத்த வேண்டும் என்று சமீபத்தில் பாகிஸ்தானை எச்சரித்த இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி உபேந்திர திவிவேதி, இந்த முறை இந்தியா தயாராக உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் 1.0-ல் நாங்கள் காட்டிய நிதானத்தை இம்முறை காட்ட மாட்டோம். இந்த முறை, உலக வரைபடத்தில் நீடிப்பது குறித்து பாகிஸ்தான் சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஒரு கப் டீ-யைவிட மொபைல் டேட்டா விலை குறைவு: பிரதமர் மோடி

'Risks are real': Pakistan defence minister Khawaja Asif on possibility of war with India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் வெளுத்து வாங்கும் கனமழை! மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

பொன்னிற வேளை... பாவனா!

ஸ்பிரிட் பட பூஜையில் சிரஞ்சீவி..! பிரபாஸ் பங்கேற்காதது ஏன்?

விமான டிக்கெட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்தாலும் பணம் திரும்பக் கிடைக்கும்! விரைவில்

சன்டே மோட்டிவேஷன்... நந்திதா ஸ்வேதா!

SCROLL FOR NEXT