ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு ட்ரோன்கள் பறந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
இந்த ட்ரோன்கள் சம்பா மாவட்ட சா்வதேச எல்லையையொட்டியுள்ள சல்லியாரி, சாம்லியால் ஆகிய கிராமங்கள் மீது வெள்ளிக்கிழமை இரவு பறந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை சம்பவ இடங்களை முற்றுகையிட்டு உள்ளூர் காவல் துறையுடன் இணைந்து சனிக்கிழமை காலை தீவிர தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது.
பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், போதைப்பொருள்கள் உள்ளிட்டவை ட்ரோன்கள் மூலம் கடத்தப்படுகின்றன.
ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் எல்லைகளில் இந்த வகை ட்ரோன் ஊடுருவல்கள் அதிகம் நிகழ்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பாதுகாப்புப் படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.