ஜம்மு-காஷ்மீரில் மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு போட்டியிடவுள்ள 3 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து காலியாக உள்ள 4 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு அக்டோபா் 24-இல் தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
இதில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி மூன்று இடங்களிலும் பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு போட்டியிடவுள்ள 3 வேட்பாளர்களை பாஜக ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
இதன்படி, ஜம்மு-காஷ்மீர் பிரிவுத் தலைவர் சத்பால் சர்மா, குலாம் முகமது மிர் மற்றும் ராகேஷ் மகாஜன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர்.
சட்டப்பேரவையில் கட்சிகளின் பலம் அடிப்படையில் பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உள்ள நிலையில் அக்கட்சி மூன்று வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.
இதனால் மாநிலங்களவைத் தேர்தலில் மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்களை ஈர்க்கும் நடவடிக்கையில் பாஜக தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.