வீரபத்ர சிங்கின் சிலையை திறந்துவைத்த சோனியா காந்தி 
இந்தியா

சிம்லாவில் வீரபத்ர சிங்கின் சிலை திறப்பு: காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு!

சிம்லாவில் ஹிமாசல் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் சிலை திறப்பு பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

சிம்லாவின் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரிட்ஜ் மைதானத்தில் உள்ள தௌலத் சிங் பூங்காவில் இமாலசலில் ஆறு முறை முதல்வராக இருந்த வீரபத்ர சிங்கின் சிலையைக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

வீரபத்ர சிங்கின் சிலையைத் திறந்துவைத்தப் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுடன், மகள் பிரியங்கா காந்தி, மறைந்த தலைவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

ஹிமாசலப் பிரதேசத்தின் முதல் முதல்வர் ஒய்.எஸ்.பர்மர், மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற குறிப்பிடத்தக்க தலைவர்களின் சிலைகளுக்கு அருகில் ஆறு அடி உயர வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர், மேலும் போலீஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தியுள்ளனர்.

புகழ்பெற்ற சிற்பி ராம் வி. சுதார், அவரது மகன் அனில் ராம் சுதார் ஆகியோருடன் தொடர்புடைய ஒரு நிறுவனம் இந்த சிலையை ரூ. 40 லட்சத்தில் கட்டியது.

சர்தார் வல்லபாய் படேலை கௌரவிக்கும் வகையில் கட்டப்பட்ட உலகின் மிக உயரமான சிலையான 182 அடி உயரச் சிலையை உருவாக்கியதில் ராம் சுதார் முக்கிய பங்கு வகித்தவர்.

ராம்பூர்-புஷாஹர் அரச குடும்பத்தின் வாரிசான வீரபத்ர சிங் முதன்முதலில் ஏப்ரல் 8, 1983 அன்று ஹிமாசாலின் முதல்வராகப் பதவியேற்றார். மேலும் ஐந்து முறை முதல்வரானார். நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டு இவர் 2021 இல் இறந்தார்.

அவரது மனைவி பிரதிபா சிங், மாநிலக் கட்சித் தலைவராகவும், அவரது மகன் விக்ரமாதித்ய சிங், ஹிமாசலில் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் உள்ளார்.

சிலை திறப்பு விழாவும் அதைத் தொடர்ந்து நடந்த பேரணியும், ராஜா வீரபத்ர சிங் அறக்கட்டளையின் தலைவருமான விக்ரமாதித்ய சிங்கால் ஏற்பாடு செய்தனர்.

இந்த நிகழ்வில் ஏராளமான கட்சித் தொழிலாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, இந்த நிகழ்விற்காக சுமார் 400 போலீஸார் நிறுத்தப்பட்டனர்.

மேலும், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, ஹெச்பிசிசி தலைவர் பிரதிபா சிங், காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந்தி, சச்சின் பைலட் மற்றும் தீபேந்தர் ஹூடா ஆகியோரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் ரஜினி பாட்டீல், மாநில அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோரும் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

Senior Congress leader Sonia Gandhi on Monday unveiled a statue of six-time chief minister of Himachal Pradesh, Virbhadra Singh, at Daulat Singh Park on the historic Ridge Ground in Shimla.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனா மீது கூடுதலாக 100% வரி எதிரொலி: பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு!

பாடவா உன் பாடலை... ஆம்னா ஷரீப்!

பிக் பாஸ் 9: எல்லோரும் வெளியேற்ற விரும்பிய ஒரு நபர்! யார் தெரியுமா?

பொன்னென மலர்ந்த கொன்றை... அகிலா!

சந்தேகமா, ஜொலிக்கட்டும்... சஞ்சனா ஆனந்த்!

SCROLL FOR NEXT