சத்தீஸ்கரில், அடுத்த 15 மணிநேரத்தில் 100-க்கும் அதிகமான மாவோயிஸ்டுகள் சரணடைவார்கள் என துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.
பஸ்தார் மாவட்டத்தின், ஜகதால்பூர் பகுதியில், வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் மாபெரும் நிகழ்ச்சியில், 100-க்கும் அதிகமான மாவோயிஸ்டுகள் சரணடைவார்கள் என சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா இன்று (அக். 16) அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் முன்னிலையில், மாவோயிஸ்ட் தளபதி ரூபேஷ் தலைமையில் சுமார் 100 பேர் சரணடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தளபதிகளான சோனு தாதா மற்றும் பிரபாகர் ஆகியோர் சரணடைந்துள்ளனர். இதனால், பஸ்தார் பகுதியில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் விரைவில் முடிவடையும் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சரணடையும் மாவோயிஸ்டுகளின் மறுவாழ்விற்கான உதவிகள் அனைத்தும் மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் என துணை முதல்வர் விஜய் சர்மா கூறியுள்ளார்.
கடந்த 20 மாதங்களில் மட்டும் 1,876 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். மேலும், வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள மாவோயிஸ்டுகள் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 2025-க்கான புகைப்படக் கலைஞர் விருது பெறும் இந்தியர் ராகுல் சச்தேவ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.