உ.பி.யில் கொல்லப்பட்ட தலித் இளைஞரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல் Photo : X / Rahul Gandhi
இந்தியா

உ.பி.யில் கொல்லப்பட்ட தலித் இளைஞரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல்!

உ.பி.யில் கொல்லப்பட்ட தலித் இளைஞரின் குடும்பத்தினரை ராகுல் சந்தித்தது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப் பிரதேசம் ரேபரேலியில் கொல்லப்பட்ட தலித் இளைஞர் ஹரிஓம் வால்மீகியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.

ராகுல் காந்தி தொகுதியான ரேபரேலியைச் சேர்ந்த ஹரிஓம் என்ற இளைஞரை, ட்ரோன் மூலம் கண்காணித்து திருடுபவர் என தவறுதலாக நினைத்து சிலர் தாக்கியதில் அவர் பலியானார்.

ஹரிஓம் வால்மீகியின் கொடூரமான கொலை, ஒரு நபரின் கொலை மட்டுமல்ல, அது மனிதநேயம், அரசியலமைப்பு மற்றும் நீதியின் படுகொலை என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தில்லியில் இருந்து விமானம் மூலம் கான்பூர் விமான நிலையத்துக்கு வருகைதந்த ராகுல் காந்தி, ரேபரேலியில் உள்ள ஹரிஓம் வால்மீகி வீட்டுக்குச் சென்று, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Rahul meets family of Dalit youth killed in UP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிகளால் 126 போ் பலி! -திரிணமூல் காங். குற்றச்சாட்டு

ஜோ ரூட் அரைசதம்; இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

பாகிஸ்தானில் திருமண நிகழ்வில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 7 பேர் பலி

ஈரானிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்: அரசு உதவ கோரிக்கை!

சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை: வெடிபொருட்கள், ஜெலட்டின் குச்சிகள் மீட்பு

SCROLL FOR NEXT