பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல்கட்டமாக 25 வேட்பாளர்களை அசாதுதீன் ஓவைசியின் ஆல் இந்தியா மஜ்லீஸ் - இ - இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி அறிவித்துள்ளது.
பிகார் சட்டப்பேரவையில் 100 தொகுதிகளில் போட்டியிடுவோம் என இக்கட்சி கூறியிருந்த நிலையில், முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 2 தொகுதிகள் முஸ்லிம்கள் அல்லாத தொகுதிகளாகும்.
இது தொடர்பாக ஆல் இந்தியா மஜ்லீஸ் - இ - இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் 25 வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கட்சியின் மாநில தலைவரும் எம்.எல்.ஏ.வுமான அக்தருல் இமாம் அமோர் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
மத்திய கயாவில் ரிசர்வ் தொகுதியான சிக்கந்ராவில் மனோஜ் குமார் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் தற்போதைய எம்.எல்.ஏ. பிரஃபுல் குமார் மாஞ்சியுடன் அவர் போட்டியிடவுள்ளார்.
கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் 19 தொகுதிகளில் ஆல் இந்தியா மஜ்லீஸ் - இ - இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி போட்டியிட்டது. இதில் 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், வெற்றி பெற்ற 4 எம்.எல்.ஏ.க்கள் பின்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | காங்கிரஸில் இணைந்தார் பாட்டியாலா முன்னாள் மேயர் சஞ்சீவ் சர்மா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.