கொல்கத்தாவிலிருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ பயணிகள் விமானத்தில் எரிபொருள் கசிந்ததால் வாரணாசியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்கள் கழித்தே எரிபொருள் கசிந்ததை விமானப் பணியாளர்கள் கண்டறிந்ததால், வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் 6இ-6961 என்ற பயணிகள் விமானம் இன்று மாலை 4.10 மணிக்கு கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
166 பயணிகளுடன் சென்ற விமானத்தில் எரிபொருள் கசிந்துள்ளது. இதனை விமானம் புறப்பட்ட சில நிமிடங்கள் கழித்தே விமானிகள் கண்டறிந்ததால், வாரணாசி விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கினர்.
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என இண்டிகோ தெரிவித்துள்ளது.
விமானத்தில் எரிபொருள் கசிந்ததை கண்டவுடன், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு அவசரத் தரையிறக்கம் குறித்து விமானிகள் கூறியுள்ளனர். உடனடியாக அனுமதி கிடைத்தவுடன் விமானத்தை வாரணாசியில் தரையிறக்கியுள்ளனர்.
இதையும் படிக்க | பிகார் தேர்தல்: தேஜஸ்வி முதல்வர் வேட்பாளரா? காங்கிரஸ் பதில் அளிக்க மறுப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.