இந்தியாவின் மூத்த விண்வெளி விஞ்ஞானியான ஏக்நாத் வசந்த் சிட்னிஸ், 100 வயதில் உடல் நலக் குறைவால் காலமானார்.
பத்ம பூஷன் விருது பெற்ற மூத்த விஞ்ஞானி ஏக்நாத் வசந்த் சிட்னிஸ், வயது மூப்பினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாள்களாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், புணேவில் உள்ள அவரது வீட்டில் இன்று (அக். 22) திடீரென விஞ்ஞானி சிட்னிஸ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சுதந்திரத்துக்கு பிறகு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசியக் குழுவில் (இன்கோஸ்பார்), விஞ்ஞானி சிட்னிஸ் இடம்பெற்றிருந்தார். இந்தக் குழுவின் முயற்சியால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தொடங்கப்பட்டது.
இத்துடன், சிட்னிஸ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாயுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
மேலும், மறைந்த விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமின் ஆரம்ப காலங்களில் அவருக்கு வழிகாட்டியாக இவர் செயல்பட்டதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இருமுடிகட்டி சபரிமலை ஐயப்பனை தரிசித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.