கோப்புப்படம்.  
இந்தியா

தலைநகர் தில்லியில் 4 பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் !

தில்லியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து நான்கு பள்ளிகளுக்கு வந்த மின்னஞ்சல்களால் பரபரப்பு நிலவியது.

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வெள்ளிக்கிழமை காலை நான்கு பள்ளிகளுக்கு வந்த மின்னஞ்சல்களால் பரபரப்பு நிலவியது.

துவாரகாவின் செக்டார் 16 இல் உள்ள சிஆர்பிஎப் பள்ளிக்கு காலை 8.15 மணிக்குக்கும், தொடர்ந்து நங்லோயில் உள்ள பள்ளிக்கு காலை 8.20 மணிக்கும், பின்னர் கோய்லா டெய்ரி பகுதியில் உள்ள பள்ளிக்கு காலை 8.51 மணிக்கும் நான்காவது மிரட்டல் பிரசாத் நகரில் உள்ள பள்ளிக்கு காலை 10.33 மணிக்கும் வந்தன.

5 நாள்களுக்குப் பிறகு உதகை மலை ரயில் இயக்கம்!

இதனால் அதிகாரிகள் உடனடியாக வளாகத்தை காலி செய்து முழுமையான சோதனைக்கு உட்படுத்தினர். இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், அனைத்து வளாகங்களும் முழுமையாக சோதனை செய்யப்பட்டன. ஆனால் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சோதனைக்குப் பிறகு மிரட்டல்கள் வெறும் புரளி என அறிவிக்கப்பட்டன என்று தெரிவித்தார். இதனிடையே மிரட்டல் விடுத்த நபரை அடையாளம் கண்டறிய மின்னஞ்சல்கள் எங்கிருந்து வந்தது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The officer further informed that four bomb threat emails were sent targeting different schools, all of which later turned out to be hoaxes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணைய நிறுவனங்களின் 14.9 கோடி கணக்குத் தரவுகள் கசிவு: ஆய்வறிக்கையில் தகவல்

பள்ளிகளில் மனநலன், வேலைவாய்ப்பு ஆலோசகா்களை நியமிப்பது கட்டாயம்: சிபிஎஸ்இ

வரும் 27-இல் 5 மெமு ரயில்கள் முழுவதும் ரத்து

மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பில்லை: வானதி சீனிவாசன்

உ.பி.யில் நடைபெறும் எஸ்ஐஆா் பணியில் முறைகேடுகள்: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT