பஞ்சாபில் சர்வதேச எல்லை அருகே 4 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் பறிமுதல்
பஞ்சாபில் சர்வதேச எல்லை அருகே 4 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாபில் சர்வதேச எல்லை அருகே தனித்தனி நடவடிக்கைகளில் நான்கு கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையில், ஃபெரோஸ்பூரில் உள்ள ஜல்லோக் கிராமத்தையொட்டிய வயலில் இருந்து பிஎஸ்எஃப் வீரர்கள், பஞ்சாப் போலீஸுடன் இணைந்து 3.248 கிலோ எடையுள்ள ஆறு ஹெராயின் பாக்கெட்டுகளை மீட்டனர்.
ஆக்ரா: குடிபோதையில் பொறியாளர் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் பலி
பாக்கெட்டுகள் மஞ்சள் நாடாவால் சுற்றப்பட்டிருந்தன. இவை அனைத்தும் ட்ரோன் மூலம் வீசப்பட்டிருக்கலாம் என்று எல்லைப் பாதுகாப்புப் படை(பிஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
மற்றொரு நிகழ்வில், அமிர்தசரஸில் உள்ள முல்லகோட் கிராமத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இருந்து 1.080 கிலோ எடையுள்ள ஹெராயின் பாக்கெட்டுகளை பிஎஸ்எஃப் வீரர்கள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், அமிர்தசரஸின் அஜ்னாலாவில் உள்ள சாஹர்பூர் கிராமத்திற்கு அருகிலுள்ள வயலில் இருந்து 570 கிராம் எடையுள்ள ஹெராயின் பாக்கெட் மீட்கப்பட்டது.
More than four kg of heroin was seized in separate operations along the India-Pakistan border in Punjab's Amritsar and Ferozepur districts, the BSF said on Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.