மத்தியப் பிரதேசத்தில் நீதிபதியின் வீட்டை மர்ம நபர்கள் தாக்கியதோடு அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிபதி அமன்தீப் சிங் சாப்ராவின் வீட்டை சனிக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். அத்துடன் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுதொடர்பாக அவர் பாலுமடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில், தானும் தனது குடும்பத்தினரும் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் வீட்டிற்கு வந்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறியுள்ளார். பிறகு வீட்டின் வாயிலில் இருந்த விளக்கு மற்றும் இரும்பு சாதனங்கள் உள்ளிட்ட சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகவும், முற்றத்திலும் கற்களை வீசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தான் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் இந்தத் தாக்குதல் சமீபத்திய நீதிமன்ற உத்தரவுடன் தொடர்புடையதா என்பதையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.