ஜார்க்கண்டில் எண்ணெய் டேங்கர் லாரி மீது நிலக்கரி சுரங்க சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.
ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து எண்ணெய் டேங்கர் லாரி மீது விழுந்தது. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில் ஒருவர் பலியானார்.
மேலும் இருவர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், எண்ணெய் டேங்கர் திறந்தவெளி சுரங்கத்திற்குள் சென்றபோது, அதன் பக்கவாட்டுச் சுவர் இடிந்து லாரி மீது விழுந்தது. அதில் லாரி கவிழ்ந்தது என்று தெரிவித்தார்.
அப்போது எண்ணெய் டேங்கருக்கு அருகில் நின்று கொண்டிருந்த சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் பலியானார்.
அதேநேரத்தில் காயமடைந்த லாரியின் ஓட்டுநர் மற்றும் துப்புரவாளர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து பலியானோரின் குடும்பத்திற்கு நிதியதவி வழங்கிய அந்நிறுவனம், குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும என்று அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.