Chief Adviser of the GoB
இந்தியா

வங்கதேச வரைபடத்தில் இந்திய மாநிலங்கள்? பாகிஸ்தானுக்கு பரிசளித்த புத்தகத்தால் சர்ச்சை!

வங்கதேசத்துடன் இந்திய மாநிலங்கள் இணைக்கப்பட்டிருப்பது போன்ற வரைபடத்தை அந்நாட்டு இடைக்காலத் தலைவர் வெளியிட்டதால் சர்ச்சை

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனஸ் அளித்த பரிசுப் புத்தகத்தில், அந்நாட்டு வரைபடத்தில் இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் உள்பட 7 வடகிழக்கு மாநிலங்களும் வங்கதேசத்துடன் இணைக்கப்பட்டிருப்பதுபோல சித்திரிக்கப்பட்டிருந்தது.

வங்கதேசத்தின் தலைநகர் தாக்காவில் பாகிஸ்தான் ஜெனரல் சாஹித் சம்சாத் மிஸ்ராவுடன் வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனஸும் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின்போது, ஆர்ட் ஆஃப் டிரையம்ப் என்ற புத்தகத்தை மிர்ஸாவுக்கு யூனுஸ் பரிசளித்தார்.

ஆனால், அந்தப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்த வங்கதேச நாட்டின் வரைபடத்தில் இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களும் இருந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவின் இறையாண்மையை யூனஸ் அவமதிப்பதாக பலரும் சமூக ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரையில் எந்தவொரு கருத்தோ பதிவோ தெரிவிக்கவில்லை.

இதையும் படிக்க: பாகிஸ்தான் உறவை மேம்படுத்த இந்திய நட்பை விட்டுக் கொடுக்க மாட்டோம்! அமெரிக்க வெளியுறவு அமைச்சா் விளக்கம்!

Northeast India under Bangladesh? Yunus' gift to Pakistan general stirs row

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மங்கள விளக்கே வருக... ஸ்ரீமுகி!

அதிமுக பூத் கமிட்டி கிளை நிா்வாகிகள் பயிற்சிக் கூட்டம்

தங்க மீன்... சுபஸ்ரீ கங்குலி!

‘எல்லாம் திட்டமிட்டபடி நடக்கிறது!’ -வட கொரிய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த புதின்!

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

SCROLL FOR NEXT