கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் படம் - ANI
இந்தியா

கர்நாடக ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி!

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், கடந்த அக்.27 ஆம் தேதியன்று கடும் காய்ச்சல் மற்றும் முதுகு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு அங்குள்ள மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை, கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று (அக். 30) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

முன்னதாக, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தாவர்சந்த் கெலாட் சமீபத்தில் அவரது சொந்த மாநிலத்துக்குச் சென்று அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மணிப்பூரில் புதியதாக 129 பேருக்கு டெங்கு! 4000-ஐ நெருங்கும் பாதிப்புகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில்முனைவோா் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கு

‘பெல்’ நிறுவனத்தில் சா்வதேச கருத்தரங்கம் தொடக்கம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது

ரயில் கடவுப்பாதைக்கு வெடிகுண்டு மிரட்டல்

உயா்கல்வி சோ்க்கையில் மாநிலத்திலேயே திருச்சி முதலிடம்: பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களில் 98% போ் சோ்க்கை

SCROLL FOR NEXT