பிகாரில் என்டிஏ கூட்டணி PTI
இந்தியா

பிகார்: மகளிருக்கு ரூ. 2 லட்சம், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் - என்டிஏ வாக்குறுதிகள்!

பெண் தொழில்முனைவோருக்கு ரூ. 2 லட்சம், பின்தங்கியோருக்கு ரூ. 10 லட்சம், 5 ஆண்டுகளில் ரூ. 50 லட்சம் கோடி முதலீடு உள்பட..

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் பேரவைத் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பிகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான வாக்குறுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அறிவித்துள்ளது.

அறிக்கையின் வாக்குறுதிகளின்படி, தேர்தலில் என்டிஏ வெற்றி பெற்றால்:

  • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி; ஒரு கோடிக்கும் அதிகமான அரசு வேலைகள்.

  • பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி.

  • தொழில் தொடங்கும் 75 லட்சம் மகளிருக்கு ரூ. 2 லட்சம் வரை நிதியுதவி.

  • விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை

  • 5 ஆண்டுகளில் ரூ. 50 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும்.

  • கேஜி முதல் முதுகலை வரையில் தரமான கல்வி இலவசம்.

  • பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்.

  • ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் பயிற்சி மையங்கள்.

  • 50 லட்சம் பேருக்கு புதிய வீடுகள்.

  • இலவசமாக ரேசன் பொருள்கள், 125 யூனிட் வரை இலவச மின்சாரம்

  • பிகாரின் மேலும் 4 நகரங்கள் மெட்ரோ ரயில் சேவைகள்.

  • 2 எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் ஐஐடி, 10 புதிய தொழிற்துறை பூங்காக்கள், 7 விரைவுச் சாலைகள்.

இந்த அறிவிப்பின்போது, பிகார் முதல்வரும் ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார், பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்பட லோக் ஜனசக்தி கட்சி, மதச்சார்பற்ற ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றன.

பிகாரில் என்டிஏ கூட்டணி

Bihar Election: NDA releases joint manifesto

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

இலவச பேருந்து பயண அட்டை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

பழைய அரங்கல்துருகம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

பாங்க் ஆஃப் பரோடா லாபம் 8% சரிவு!

SCROLL FOR NEXT