திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற பத்பநாபசுவாமி கோயில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை போடப்பட்டிருந்த மாபெரும் வண்ண பூக்கோலம். 
இந்தியா

கேரளத்தில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

கேரளத்தில் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

கேரளத்தில் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம், ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு ஓணம் கொண்டாட்டங்கள் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி தொடங்கின. இதன் நிறைவாக வெள்ளிக்கிழமை ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மக்கள் புத்தாடை அணிந்து, வீடுகளில் பல வண்ண பூக்கோலமிட்டு, ஓணம் பாடல்களைப் பாடி மகிழ்ந்தனா். கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டனா். வீடுகளில் பல்வேறு பதாா்த்தங்களுடன் ஓண விருந்து களைகட்டியது. மாநிலம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், புலிக்களி, தெய்யம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

மது விற்பனை அமோகம்: ஓணம் கொண்டாட்டத்தையொட்டி, கடந்த ஆகஸ்ட் 25 முதல் செப்.4 வரை கேரள மாநில மதுபானக் கழக (கேஎஸ்பிசி) மதுக் கடைகளில் ரூ.826 கோடிக்கு மேல் விற்பனை நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.776.82 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின. நடப்பாண்டு இது 6.38 சதவீதம் அதிகரித்துள்ளது.

இலக்கில்லாத கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி: துரை வைகோ

எழும்பூா் ரயில் நிலையம் புனரமைப்புப் பணி: சென்னை ரயில்கள் புறப்படும் இடங்கள் மாற்றம்

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு

நாளை சந்திர கிரகணம்: அறிவியல் மையத்தில் தொலைநோக்கி மூலம் பாா்வையிட சிறப்பு ஏற்பாடு

மாணவிகள் 4 பேருக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் மீது ‘போக்ஸோ’ வழக்கு

SCROLL FOR NEXT