காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று(புதன்கிழமை) ரேபரேலிக்குச் சென்றுள்ளார்.
ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு அவ்வப்போது பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இரு நாள் பயணமாக ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலிக்கு இன்று காலை சென்றார். லக்னெள விமான நிலையத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
ரேபரேலியில் அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருக்கிறார். முதலில் ஹர்சந்த்பூர், உன்சாஹர் சட்டமன்றத் தொகுதிகளின் பூத் கமிட்டி குழுவுடன் அவர் சந்திப்பு மேற்கொள்கிறார். அதன்பின்னர் சதார் சட்டமன்றத் தொகுதியில் அசோகத் தூணை திறந்து வைக்கிறார்.
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆவது முறையாக ராகுல் ரேபரேலி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.